×

கூட்டுறவு துறை ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்க வேண்டும்: எடப்பாடி கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணை தொகையை வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு மட்டும் 10 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு துறையை பொறுத்தவரை கூட்டுறவு சங்கங்களின் நிதியில் இருந்துதான் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. அரசின் நிதியில் இருந்து போனஸ் வழங்கப்படுவதில்லை.எனவே, உடனடியாக கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதமாக போனஸை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், 2021ம் ஆண்டு முதல் 20 சதவீத ஊதிய உயர்வுக்கு குறையாமல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும்.

The post கூட்டுறவு துறை ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்க வேண்டும்: எடப்பாடி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் மறைவுக்கு எடப்பாடி இரங்கல்